விதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை, சப்-கலெக்டர் ரத்து செய்தார். விபத்துக்களை தடுக்க, பள்ளி வாகனங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்ய அரசு உத்தரவிட்டது. அரசு விதிமுறைபடி பள்ளி வாகனங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா, என்பதை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சப்-கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். மேட்டூர் தாலுகாவில், 221 பள்ளி வாகனங்கள் உள்ளன. இவற்றில், 35 வாகனங்கள் நேற்று ஆய்வுக்கு வந்தன. மேட்டூர் சப்-கலெக்டர் அனீஷ்சேகர், ஆய்வு செய்தார். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத,, இருக்கை மோசமாக இருந்த, முதலுதவி பெட்டி இல்லாத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
No comments:
Post a Comment