தமிழகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளை, போராட்டம் முடியும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என, அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் அரசு செவிலியர் பள்ளியில் படித்து முடித்தவர்களுக்கும், தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கும் அரசு தேர்வு நடத்தி வேலைவாய்ப்பளிக்க வேண்டும், என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் தான் வகுப்புகளில் அமர்கின்றனர். மற்ற நாட்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில் தனியார் செவிலியர் பள்ளியில் படிப்பவர்கள் வாரத்தில் 2 மணி நேரம் தான் மருத்துவமனை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். மற்ற நாட்களில் வகுப்புகளில் அமர்கின்றனர். இதனால் தனியார் செவிலியர்கள் அரசு தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறுவார்கள். இதனால் முன்பிருந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கூறி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் வார்டு பணிகளை புறக்கணித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மாணவிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், செவிலியர் மாணவிகளை அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். வகுப்புகளை மட்டும் நடத்துங்கள் என அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment