Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 29 January 2014

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 38 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி அரசுப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, சந்தியா என்ற மாணவியின் உணவு தட்டில் பல்லி கிடந்தது. இதனை கண்ட அந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார். அவரை தொடர்ந்து 6 முதல் 8ம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 38 பேருக்கு வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனே சக மாணவர்கள், ஆசிரியர்கள் அவர்களை மீட்டு ஆட்டோக்கள் மூலம் பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து 8 மாணவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment