Thursday, 30 January 2014

நூறு வயது மூதாட்டியைப் பராமரிக்கும் மாணவிக்கு விருது

நூறு வயது மூதாட்டியைப் பராமரித்து வருவதற்காக மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் 6-வது படிக்கும் மாணவி அர்ச்சனாவுக்கு ஹோப் ஹீரோ என்கிற விருது வழங்கப்பட்டது.
 இந்த மாணவி அந்தப் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அந்த ஊரிலேயே உள்ள பெரியாண்டி என்னும் மூதாட்டி குளிக்கவும், உணவருந்தவும் உதவி செய்துவருகிறார்.
 அவரது மனிதாபிமானத்தைப் பாராட்டி அவருக்கு திரிபுரா அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
 சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.
 அதேபோல், பாம்பிடம் இருந்து சிறிய குழந்தையைக் காப்பாற்ற உதவியதற்காக வேலூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த விஷாலானி என்கிற சிறுமிக்கும், பள்ளியை விட்டு இடையிலேயே நின்ற சக வகுப்புத் தோழனை தொடர்ந்து படிக்க உதவி செய்ததற்காக கோவை மாவட்டம் பன்னிமடையைச் சேர்ந்த மைதின் ராஜ் என்கிற சிறுவனுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
 திரிபுரா அறக்கட்டளை சார்பில் இந்தியா முழுவதும் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்காக 86 டியூஷன் சென்ட்டர்கள் நடத்தப்படுகின்றன. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழைக் குழந்தைகளுக்கு யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதாக இந்த அறக்கட்டளையின் இயக்குநர் இலைன் கூப்பர் கூறினார்.
 இந்த மையங்களில் படிக்கும் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக இந்த ஹோப் ஹீரோ விருது வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment