Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 23 March 2014

+2 உயிரியல் தேர்வு: 3 கேள்விகள் தவறு, மதிப்பெண்கள் வழங்க வலியுறுத்தல்


பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில், மூன்று, ஒரு மதிப்பெண் கேள்விகள், தவறாக கேட்கப்பட்டுள்ளன. இதற்குரிய மூன்று மதிப்பெண்ணை, தேர்வுத்துறை வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த, 20ம் தேதி, உயிரியல்தாவரவி யல் தேர்வு நடந்தது. உயிரியல் பாடத்தில் இருந்து, 75 மதிப்பெண், தாவரவியல் பாடத்தில் இருந்து, 75 மதிப்பெண் என, 150 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கிறது. 
இதில், மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது. இந்த மூன்று கேள்விகளுக்கும், தலா ஒரு மதிப்பெண் வீதம், மூன்று மதிப்பெண் வழங்குவது தான் சரியான முடிவாக இருக்கும்.
இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.
இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜனிடம் கேட்டபோது, ''பாட நிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்கப்படும். கேள்விகள் தவறு என, அவர்கள் தெரிவித்தால், அதற்கான மதிப்பெண் வழங்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment