Monday, 3 March 2014

திருச்சியில் 91 மையங்களில் பிளஸ் 2 தேர்வு:மாணவர்களுக்கு ஏற்படும் அசெளகர்யங்களை சமாளிக்க முதலுதவிப் பெட்டி, குளுக்கோஸ், டீ, காபி

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு திடீரென ஏற்படும் அசெüகர்யங்களை சமாளிக்க முதலுதவிப் பெட்டி மற்றும் குளுக்கோஸ், டீ, காபி உள்ளிட்டவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  திருச்சி மாவட்டத்தில் 91 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் திங்கள்கிழமை முதல் தொடங்குகின்றன. இவற்றில் மொத்தம் 31,284 மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். இவர்களில் 18,084 பேர் மாணவிகள்.
  வினாத்தாள்களைப் பாதுகாக்க 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  விடைத்தாள்களைப் பாதுகாக்க தூய வளனார் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்து வர 24 விடைத்தாள் வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கூடுதலாக இரு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
  தேர்வுமையங்களில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க 52 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  இவற்றுடன் இந்த ஆண்டு கூடுதல் முயற்சியாக, மாணவ, மாணவிகளுக்கு திடீரென ஏற்படும் மயக்கம் உள்ளிட்ட அசெüகரியங்களைச் சமாளிக்கும் வகையில், தேர்வு மையங்களில் குளுக்கோஸ், டீ, காபி மற்றும் முதலுதவிப் பெட்டிகளையும் தயாராக வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார் தெரிவித்தார். 

No comments:

Post a Comment