அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மடப்புரம் சமுதாயக்கூடத்தில் மாநிலத் தலைவர் சே.க.விஜயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
தீர்மானங்கள் வருமாறு: சத்துணவுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். சத்துணவு பணியாளர்களை முழுநேர பணியாளராக்க வேண்டும். பணிவிதிகளை ஏற்படுத்தி, பணிவரன்முறை செய்து காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.1,000-ம் என்பதை மாற்றி, அரசுவிதிப்படி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment