Friday, 28 March 2014

தமிழ் முதல்தாள் தேர்வில் எழுத்துப்பிழை: மாணவர்கள் குழப்பம்

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள் தேர்வு புதன்கிழமை நடந்தது. வினாத்தாளில் 49-இ கேள்வியில், “மீள் நோக்கும்' எனத் தொடங்கும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் கேட்கப்பட்டிருந்தது. இதில், மீள்நோக்கும் என்பதற்குப் பதில், ‘மீன் நோக்கும்' என்று தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. இதனால் பல மாணவ, மாணவிகள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து தமிழாசிரியர் ஒருவர் கூறுகையில், “தமிழ் பாடத்தில் ஒரு எழுத்து மாறினாலும், அதன் பொருள் மாறிவிடும். மீள் நோக்கும் என்பதற்கு பதில், மீன் நோக்கும் என கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் அதன் அர்த்தமும், பொருளும் மாறிவிட்டது. பாடல் வரி மீள் நோக்கும் என தொடங்கும் என, மாணவர்களுக்கு தெரிந்திருந்தும், வினாத்தாளில் மீன் என அச்சிடப்பட்டதால், அதை வைத்து சிலர் முழு பாடலையும், மீன் நோக்கும் என மாற்றி எழுதி வைத்திருக்கக்கூடும். எனவே, இந்த கேள்விக்கு மாணவர்கள் மாற்றி எழுதியிருந்தாலும், உரிய மதிப்பெண் வழங்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment