Saturday, 1 March 2014

பார்வையற்ற மாணவர்களுக்கு செல்போன், லேப்டாப், பிரைலெர்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய மாற்றுத் திறனாளிகள் விவகார அமைச்சகம், பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய திட்டத்தை தயாரித்துள்ளது. இதன்படி, 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களுக்கு 5 ஆண்டில் ஒரு முறை மொபைல் போன், லேப்டாப் மற்றும் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிரைலி நோட் டேக்கர் மற்றும் பிரைலர் வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கேட்டிருந்தது. மேலும், இப்போது மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்கவும், பொருத்தவும், இதுதொடர்பாக இதர பொருட்களுக்கான வருமான உச்சவரம்பு தொடர்பான விதிகளை திருத்தவும் ஒப்புதல் கேட்டிருந்தது. 

இதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான பொருட்களுக்கான வருமான உச்ச வரம்பை 100 சதவீதம் வரை உயர்த்தப்படும். அதாவது இப்போதுள்ள ரூ.6,500 மாத உச்ச வரம்பு, ரூ.15,000 ஆகமாக உயர்த்தப்படும். மேலும், ரூ.20,000 மாத வருவாய் இருப்போருக்கு 50 சதவீதம் வரை இப்பொருட்களுக்கு சலுகை அளிக்கப்படும். உதவிகள் மற்றும் உப பொருட்களுக்கான மாத உச்சவரம்பு ரூ.6,000ல் இருந்து ரூ.10,000 ஆகவும், பல்வேறு ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உச்சவரம்பு ரூ.8,000ல் இருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்படும்.இந்த திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

No comments:

Post a Comment