Saturday, 1 March 2014

பாலியல் பலாத்காரத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது: நீதிபதி நாகமுத்து


மாணவி க்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது வேதனை அளிக்கிறது என்று உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. சென்னையை சேர்ந்த தமிழாசிரியர் முருகையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிகளை நான் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் குற்றச் சாட்டு கூறி என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் நிரபராதி. எனவே எனக்கு ஜாமீன் தர வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். 

போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ரியாஸ் ஆஜராகி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது மனுதாரர் தான் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே, முன் ஜாமீன் தரக்கூடாது என்றார்.இதைகேட்ட நீதிபதி, மாணவிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டிய ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்வது வேதனை அளிக்கிறது. இது கொடூரமான செயல், எனவே, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மனுதாரர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதில் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே தமிழாசிரியர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று தீர்ப்பு கூறினார்.

No comments:

Post a Comment