Friday, 18 April 2014

பகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு


மதுரை ஐகோர்ட் கிளையில் கடலாடி பூதகுடி ராமர் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி பகுதி நேர ஆசிரியராக, 1980ல் பணியில் சேர்ந்தேன். 1990ல், அரசு பணி நிரந்தரம் செய்தது. முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அடைந்தேன். 2013ல் ஓய்வு பெற்றேன். பகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்கக் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். 
இதுபோல மேலும் 11 பேர் மனு செய்தனர். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: ஏற்கனவே, ஊராட்சியில் பகுதிநேரமாக பணிபுரிந்த எழுத்தர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டனர். அவர்களுக்கு, நிரந்தர பணிக்காலத்துடன், பகுதி நேர பணிக்காலமும் சேர்த்து ஓய்வூதியப் பலன்கள் வழங்க 2011 ல் அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவு, மனுதாரர்களுக்கு பொருந்தாது என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு மறுப்பது, அரசுத்துறை ஊழியர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதற்குச் சமம். மனுதாரர்களுக்கு பகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க, 12 வாரங்களுக்குள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment