Friday, 18 April 2014

ஓட்டுச்சாவடிக்குள் மொபைல்போன் கொண்டு செல்ல தேர்தல் கமிஷன் தடை


லோக்சபா தேர்தலின் போது ஓட்டுச்சாவடிக்குள் மொபைல்போன் கொண்டு செல்ல, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

பொள்ளாச்சி லோக் சபா தொகுதிக்கு உட்பட்ட வால்பாறையில் 55,288 வாக்காளர்கள் உள்ளனர். லோக் சபா தேர்தலுக்காக வால்பாறையில் 61 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்.,24ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, வீடு தோறும் வாக்காளர்களுக்கு 'பூத்சிலிப்' வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணியில் சத்துணவு அமைப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து வால்பாறை தாசில்தாரும்,உதவி தேர்தல் அதிகாரியுமான பாலகிருஷ்ணன் கூறியதாவது: 
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு 'பூத்சிலிப்' வழங்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் கிடைக்காதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய கணக்குப்புத்தகம், பான்கார்டு, ஆதார்கார்டு, ஸ்மார்ட்கார்டு ஆவணம், தேர்தல் கமிஷன் வழங்கும் 'பூத்சிலிப்' ஆகியவற்றை கொண்டு சென்று ஓட்டுபோடலாம். தேர்தல் நடைெபறும் நாளில் ஓட்டுச்சாவடிக்கு மொபைல்போன் எடுத்துச்செல்லக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment