Thursday, 17 April 2014

தேர்தலில் மண்டல அலுவலர்களின் பணி என்ன?

தேர்தலில் மண்டல அலுவலர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமல்லாது தேர்தல் தொடர்பான அனைத்து பொருட்களை யும் வாக்கு சாவடிக்கு கொண்டு செல்வதை கண்காணிப்பதும் மண்டல அலுவலர்களின் பணி யா கும். மேலும் மண்டல அலு வலர்கள் தங்கள் பகுதியில் வாக்கு சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர் பெயர் விவர குறிப்பு சீட்டு முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறதா என்பதையும், எத்தனை சதவீதம் விநியோகம் செய்யப் பட்டுள்ளது என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு நடை பெறும் நாள் காலை 6 மணி க்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். வெப் கேமரா, வீடியோ கேமரா மூலம் எந்தெந்த பகுதிகளில் ஒளிப் பதிவு செய்ய வேண்டும் என்பதை தெளிவாக மண் டல அலு வலர் வாக்கு சாவடி அலு வலர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். 

No comments:

Post a Comment