தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கால கெடுவை மே 18 வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விருகம்பாக்கத்தை சேர்ந்த பாடம் நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: தனியார் பள்ளிகளில் எல்கேஜியில் மாணவர்கள் சேர்க்கையை முன்கூட்டி முடிக்க கூடாது. மே 3ம் தேதி தொடங்கி 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டது. இந்த காலக்கெடு மிகவும் குறுகியதாக உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழைகளுக்கு 25 சதவீத இடங்களை தனியார் பள்ளிகள் ஒதுக்கவேண்டும். எனவே விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடுவை நீடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து காலக்கெடுவை மே 18ம் வரை நீடித்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment