Thursday, 17 April 2014

வாக்குச்சாவடிஅலுவலர்கள் கவனகத்துடன் பணியாற்ற வேண்டும்: திருச்சி மாவட்ட ஆட்சியர்

வாக்குப்பதிவன்று கவனத்துடனும், பொறுப்புணர்வுடனும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரன்.
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்டப் பயிற்சி வகுப்பை பார்வையிட்டு, மேலும் அவர் கூறியது:
வாக்காளர் அடைய அட்டை இல்லாதவர்களிடம், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக அட்டை, மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாற்று ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளலாம்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியல் மற்றும் அவருக்குரிய சின்னம் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெண்களுக்கு வாக்களிக்க வரிசையில் முன்னுரிமை அளிக்கலாம்.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை படிவம் 17சி-யில் தயாரித்து, அதன் நகல்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்

No comments:

Post a Comment