தமிழகத்தில், பேப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்தடை ஆகியவற்றால், "நோட்ஸ்'கள் விலை, 25 சதவீதம் உயர்ந்துள்ளன. தமிழக அரசு, மாணவர்களுக்கு, புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவற்றை, இலவசமாக வழங்கி வருகிறது. நோட்ஸ்களை மட்டும், மாணவர்களுக்கு, பெற்றோர், வெளி மார்க்கெட்டில் வாங்கி தருகின்றனர். 3ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு பாடங்களுக்கும், தனியார் நிறுவனங்கள், நோட்ஸ்களை தயாரித்து விற்பனை செய்கின்றன. தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின், இன்னும், 25 நாட்களில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நோட்ஸ்கள், விற்பனைக்கு வரத்துவங்கி உள்ளன. குறிப்பாக, பொதுத்தேர்வு நடக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான நோட்ஸ்கள், அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நோட்ஸ்களின் விலை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நோட்ஸ் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும், பேப்பர், அட்டை, கலிங்கம், நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வும், மின்தடையாலும், நோட்ஸ் விலையை அதிகரிக்க செய்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு, 3ம் வகுப்பு 9ம் வகுப்பு நோட்ஸ்களின், குறைந்த பட்ச விலை, 65 ரூபாயில் இருந்து துவங்கியது. ஆனால், நடப்பாண்டு, 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 நோட்ஸ்கள், 80 ரூபாயில் இருந்து, 110 ரூபாயாக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment