Monday, 19 May 2014

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது: வழக்கம் போல் தொடங்கின அரசுப் பணிகள்


மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன.

தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் திரும்பப் பெறப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று திங்கள் கிழமை காலையில் இருந்து அரசுப்பணிகள் வழக்கம் போல் நடக்க தொடங்கினர். அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்க தொடங்கியது.

No comments:

Post a Comment