Friday, 2 May 2014

கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே
தரப்பட்டுள்ளன.
அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்
விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரது புகைப்படம்
மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல்கள்
மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமானச் சான்றிதழ்
கல்விக் கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்புச் சான்றிதழ்(ஏதேனும் இருந்தால்)
கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவரது அல்லது அவரது பெற்றோரது அல்லது ஜாமீன் கையெழுத்து போடும் நபரது கடந்த 6 மாதத்திற்கான வங்கிக் கணக்கு அறிக்கை
வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமானக் கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும்.

இவை அல்லாமல், வங்கிகள் தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாக கேட்க வாய்ப்பிருக்கிறது. அவற்றையும் மாணவர்கள் அளிக்க வேண்டியது அவசியம்

No comments:

Post a Comment