Friday, 2 May 2014

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன் படுத்துவது ஜனவரி முதல் கட்டாயமாகிறது.

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதியகாசோலைகளைப் பயன் படுத்துவது ஜனவரி முதல்கட்டாயமாகிறது.
காசோலைகளை பணமாக மாற்றுவதில் தற்போதுஏற்பட்டு வரும் தாமதத்தைத் தவிர்க்க ரிசர்வ் வங்கி இந்தநடவடிக்கையை மேற்கொண் டுள்ளது. இத்திட்டம் ஏற்கெனவேஅறிவிக்கப்பட்டிருந்தாலும் சில
நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அமலாவதில் தாமதம்ஏற்பட்டது. வங்கிகளில் புதிய காசோலை முறையை 2013-ம் ஆண்டுஏப்ரல் முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது. அதன்படி, ‘‘சி.டி.எஸ்’’ என்ற இந்த திட்டத்தின் கீழ், அனைத்து வங்கிகளும்சி.டி.எஸ்-2010' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட காசோலைகளைமட்டுமே பயன்படுத்த வேண்டும். இவை “ஸ்கேன்' செய்யப்பட்டு,ஆன்-லைன் வாயிலாகவே, மற்றொரு வங்கிக் கிளைக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பிறகு, காசோலையில் குறிப்பிட்டுள்ளபடிவாடிக்கையாளருக்கு பணம் உடனடியாக வழங்கப்படும்.
இந்த புதிய வகை காசோலை களை, முழு அளவில் பயன்பாட் டிற்குகொண்டு வரும் பொருட்டு, அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களிடம் உள்ள பழைய காசோலைகளைத் திரும்பப் பெற்றுவருகின்றன.
வங்கிகள், சேமிப்புகணக்கு வாடிக்கையாளர்களுக்கு, முதன்முறையாக வழங்கும் புதிய வகை காசோலைகளுக்கு கட்டணம்எதுவும் வசூலிக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
தற்போது, வங்கி வட்டாரத்தில், பழைய காசோலைகளின் புழக்கம்அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, புதிய காசோலைகளைநடைமுறைப்படுத்துவதற்கான காலக் கெடு, தொடர்ந்துநீட்டிக்கப்பட்டு வருகிறது. 2013-ல் ஜூலை மாதம், பின்னர், ஆகஸ்ட் 1-ம் தேதி என காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதிக்குநீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வரும் ஜனவரிமுதல் பழைய காசோலைகளை வங்கிகள் ஏற்காது என்றும்,சி.டி.எஸ்-2010' தொழில்நுட்ப வசதி கொண்ட காசோலைகளைமட்டுமே ஏற்கவேண்டும் என வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி தகவல்அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment