Saturday, 10 May 2014

மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
மாணவர்களுக்கு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடுவதற்கு கால அவகாசம் கோரப்பட்டுள்ளதால், வழங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சடிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு அவசரமாக அச்சடிக்கப்பட்டதால், 30 ஆயிரத்துக்கும் அதிகமான சான்றிதழ்கள் அச்சுப்பிழை காரணமாக புதிதாக மாற்றி வழங்கப்பட்டன.
மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் இருந்தால் மாணவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு பிழைகளில்லாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment