Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 4 June 2014

ஜூன் 30-க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம்: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஜூன் 30-க்குள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதன் விவரம்: மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் இல்லாத அனைத்து அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணியை முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே மழை நீர் சேகரிப்பு கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள மழை நீர் சேகரிப்பு கட்டுமானங்களை பொதுப்பணித்துறை மூலம் சீரமைக்க வேண்டும். மாணவர்களை ஒருங்கிணைத்து மிகப் பெரிய அளவில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளி வளாகத்தினுள் மழை நீர் சேகரிப்பு தொடர்பாக சுவர் விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும்.
மழை நீர் சேகரிப்பு தொடர்பான உறுதி மொழியை பள்ளிகளில் தினசரி நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில் எடுக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பில் சிறந்த பள்ளிக்கு விருது வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment