ராஜபாளையம் அருகே தென்றல் நகரில், 3 மாணவர்களே படிக்கும் அரசு துவக்கப்பள்ளியில், ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார்.
தென்றல் நகரில் உள்ள ஒன்றிய துவக்கப் பள்ளியில் தற்போது 2 மாணவர்கள், ஒரு மாணவி என, 3 பேர் மட்டுமே படிக்கின்றனர். ஒரே வகுப்பு அறை மட்டுமே உள்ளது. பள்ளி நேரத்தில் 3 பேரும் விளையாடி வருகின்றனர். வகுப்பறையில் ஆசிரியை மகேஸ்வரி மட்டும் இருந்தார். அவர் கூறுகையில், "தலைமை ஆசிரியை விடுப்பில் உள்ளார் நான் கோதை நாச்சியார் புரம் பள்ளியில் இருந்து, மாற்றுபணியாக இங்கு வந்து உள்ளேன். மற்ற விவரங்களை தலைமை ஆசிரியையிடம் தான் கேட்க வேண்டும்,” என்றார்.
உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம் கூறுகையில், "அந்த பள்ளியில் 3 மாணவர்கள் தான் உள்ளனர். விடுப்பில் சென்ற தலைமை ஆசிரியை வந்தவுடன், மேலும் 15 மாணவர்களை சேர்ப்பதற்கான பணிகள் நடக்கும். 3 மாணவர்களுக்கான சத்துணவு, வேறு இடத்தில் இருந்து வருகிறது,” என்றார். அரசு பள்ளிகளில், காலணி , புத்தகம், நோட்டு என 14 வகை இலவச பொருட்களை அளித்தாலும், மாணவர்கள் சேர்க்கை பல இடங்களில் குறைந்து வருகிறது. இதற் கான காரணத்தை கல்வி அதிகாரிகள் அறிந்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment