Thursday, 5 June 2014

மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்குத் தேர்வு: திருச்சி மண்டலத்தில் 5580 பேர் எழுதுகின்றனர்


மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்துக்காக டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வை திருச்சி மண்டலத்தில் 5580 பேர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வரும் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்துகிறது. இதில் 2 இடங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (வேதியியல், இயற்பியல்)ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட இதரப் பாடப்பிரிவுகளிலிருந்து 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு மாநிலத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் நடைபெறுகிறது.

திருச்சி, கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்தில் 20 மையங்களில் 5580 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். தேர்வைக் கண்காணிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment