பள்ளி மற்றும் கல்வித்தர மேற்பாட்டுக்காக 8 ஆயிரம் பள்ளித் தலைமை ஆசிரியர்க்கு பயிற்சி அளிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் கூடிய அகமேற்பார்வை அவசியம். இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தெரிந்து வைத்துக் கொள்வதும் அவசியம். அதனால் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் 2 நாள் பயிற்சியை அளிக்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி 2 கட்டமாக அளிக்கப்படும்.
இதையடுத்து மாவட்ட அளவிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் பயிற்சி பெற்றவர்கள் மாவட்ட அளவில் பயிற்சி அளிப்பாளர்கள். இந்த பயிற்சி ஜூலை 7ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 2 நாள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், 8 ஆயிரத்து 629 தலைமை ஆசிரியர்கள் 38 மையங்கள் மூலம் பயிற்சி பெறுகின்றனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த பயிற்சியை நடத்துவார்கள்.
No comments:
Post a Comment