ஆசிரியர் தகுதி தேர்வில், சரியான விடை எழுதிய ஆசிரியருக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஸ்வரி என்பவர் தாக்கல் செய்த வழக் கில் கூறியிருப்பதாவது:நான் கடந்த மே மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினேன். அதில், 81 மதிப்பெண் பெற்றேன். தேர்வில், 33 வது கேள்விக்கு சரியான விடைஎழுதிய எனக்கு மதிப்பெண் கொடுக்க தவறிவிட்டனர். இதுதவறானது. இதற்கு மதிப்பெண் தர நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.கடலினை மட்டுமே குறிக்காத சொல்லை தேர்வு செய் என்ற கேள்வி இருந்தது. இதற்கு விடை ஆழி, முந்நீர், பறவை, சமுத்திரம் என்று இருந்தது. இதில் சமுத்திரம் என்று நான் விடை எழுதினேன். அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம், ஆழி தான் சரியான விடை. சமுத்திரம் என்பதற்கு மதிப்பெண்ணை தர முடியாது என்று அறிவித்தனர்.
சமுத்திரம் என்றால் கடல் என்கிற அர்த்தத்தை தவிர எண்ணையும் குறிக்கும். எனவே கடல் மட்டுமே குறிக்காத விடை, சமுத்திரம் தான் என்றும், இதற்கு மதிப்பெண் கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். ஒரு கல்லூரி ஆசிரியரை வைத்து விடை கேட்டார். இதற்கு கல்லூரி ஆசிரியர் கொடுத்த விடையும், மனுதாரர் எழுதிய விடையும் சரியாக இருந்தது. எனவே, வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் எழுதிய விடைக்கு மதிப்பெண் கொடுத்து, புதிய தேர்வு பட்டியலை தயார் செய்து வெளியிட வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment