Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 7 June 2014

டி.டி.எட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டம்


தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (டிடிஎட்) எழுத, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்காத தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர்களுக்கு 26ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. இந்த தேர்வு எழுத விரும்புவோர், விண்ணபிக்க ஏப்ரல் 26 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. அந்த தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

இதற்கான விண்ணப்ப படிவங்களை 9 மற்றும் 10ம் தேதிகளில் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றுகளை இணைத்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 10ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, பதிவுக் கட்டணம் ஸீ 10, மதிப்பெண் சான்று (முதலாண்டு மற்றும் இரண் டாம் ஆண்டு) கட்டணம் தலா ரூ.100, சேவைக்கட்டணம் ரூ.5, சிறப்பு அனுமதிக் கட்டணம் ஸீ 1000, ஆன்லைன் கட்டணம் ஸீ 50 என சேர்த்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், போட்டோவுடன் கூடிய விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்த பிறகு, அதே இடத்தில் கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்குரிய ஹால்டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment