Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 16 June 2014

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது


தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

பணியிட மாறுதல்ஆண்டுதோறும் அரசு பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர் கள் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் பணி நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதன் விவரம் வருமாறு:-இன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, நாளை(செவ்வாய்க்கிழமை) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, 18-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு நடக்கிறது. 

மாவட்ட தலைநகரங்களில்...இதேபோல், இன்று வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு, 18-ந் தேதி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு, 19-ந் தேதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு, 23-ந் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு, 24-ந் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி செய்வதற்கான கலந்தாய்வு, 26-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.

No comments:

Post a Comment