Saturday, 7 June 2014

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை


ஆரம்ப கல்வி முதல் +2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

. பெரும்பாலும் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வின் போது தனியார் பள்ளிகளில் படித்த தொழிலதிபர்களின் வாரிசுகளுக்கு அதிக அளவில் இடங்கள் கிடைப்பதாகவும், இதனால் ஆரம்ப கல்வி முதல் +2 வரை அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு கலந்தாய்வில் இடம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தார். 

எனவே இந்த நிலையை போக்க ஆரம்ப கல்வி முதல் +2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் கேட்டுக்கொண்டார். 

No comments:

Post a Comment