Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 10 June 2014

சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்


தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளை ரத்து செய்யகோரி குமரி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜை அணிந்து பள்ளிக்கு வந்தனர். குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்ததை காரணம் காட்டி பளுகல், இரணியல், படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி ஆகிய 3 மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 12 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தேர்வில் படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி 100% தேர்ச்சியும், இரணியல் அரசு மேல்நிலை பள்ளி 94 சதவீத தேர்ச்சியும் பெற்றிருந்தது. 

இதனால், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை தினமாக அனுசரிக்க அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்திருந்தது. அந்த வகையில் நேற்று தொடக்க நிலை, நடுநிலை, இடைநிலை, மேல்நிலை பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என்று சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் பணிக்கு வந்தனர். சிலர் கோரிக்கை அட்டைகளை மட்டும் அணிந்திருந்தனர்.

அந்த கோரிக்கை அட்டையில், ‘3 மாவட்ட கல்வி அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், சங்க பிரதிநிதிகள், முன்னிலையில் உறுதியளித்தபடி 3 தலைமை ஆசிரியர்கள் பணியிட நீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும், முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஆசிரியர்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடாது’ என்று எழுதப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment