Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 14 June 2014

டியூஷனுக்கு வருமாறு மாணவர்களிடம் நிர்பந்தம்! முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அடாவடி


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களை கட்டாயம் டியூஷனுக்கு வர வேண்டும் என நிர்பந்தித்து வருவதால் ஏழை பெற்றோர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.


பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணே அந்த மாணவனின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதால், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக செலவை பற்றி கவலைப்படாமல் தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.மேலும், ஒவ்வொரு பாடத்திற்கும் தனியாக டியூஷனுக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். இதுபோன்ற மாணவர்களுக்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல், கணக்கியல் பாடங்கள் நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டாக சேர்ந்து நகரப் பகுதிகளில் "டியூஷன் சென்டர்' நடத்தி வருகின்றனர்.தனியார் பள்ளி நிர்வாகங்கள் பல, பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிளஸ் 1 மாணவர்களுக்கு நேரடியாகவே பிளஸ் 2 பாடங்களை நடத்த துவங்கி விடுகின்றனர்.
கோடை விடுமுறையில் ஒவ்வொரு பாடத்திற்கும் சிறந்த (அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும்) ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்களும், பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு முதல் ஆண்டே மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கியுள்ளனர்.இந்த பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல், கணக்கியல்) ஆசிரியர்கள், மாணவர்களை கட்டாயமாக தன்னிடம் டியூஷன் படிக்க வேண்டும்.ஒவ்வொரு பாடத்திற்கும் 4,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இல்லையெனில் செய்முறைத் தேர்வில் "கை' வைத்து விடுவதாக மிரட்டுகின்றனர்.இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment