Monday, 2 June 2014

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு


கோடை விடுமுறைக்கு பிறகு இன்று அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு முடிந்து மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, வெயில் காரணமாக பள்ளி திறப்பதை தள்ளிப் போட வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஆனால், தனியார் பள்ளிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜூன் 9ம் தேதிக்கு பள்ளிகளை திறந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்டு வருகின்றனர். இது குறித்து அரசு தரப்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதையடுத்து தனியார் பள்ளிகள் நிர்வாகத்தினர் தங்களுக்கு வசதியான தேதிகளில் பள்ளிகளை திறப்பது என்று முடிவு செய்துள்ளனர். இதன்படி சில பள்ளிகள் 4ம் தேதியும், சில பள்ளிகள் 6ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment