Tuesday, 3 June 2014

எச்.ஐ.வி.ஐ காரணம் காட்டி நீக்கப்பட்ட மாணவி மீண்டும் சேர்ப்பு


கோவையில் எச்.ஐ.வி.யை காரணம் காட்டி பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். எச்.ஐ.வி. நோய் பாதிப்பால் பெற்றோர் இறந்த நிலையில் தொண்டு நிறுவனத்தில் தங்கி படித்து வரும் ஒரு மாணவி, இன்று கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். 

ஆனால், அந்த மாணவிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதால் மற்ற மாணவர்களுக்கும் அந்த நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறிய பள்ளி நிர்வாகம், சில மணி நேரத்தில் அவரை பள்ளியில் இருந்து வெளியேற்றியது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். பின்னர் இந்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் அந்த மாணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

No comments:

Post a Comment