Saturday, 7 June 2014

மாணவியரை ஆபாசமாக படம் பிடித்ததால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்


மாணவியரை, ஆசிரியரே ஆபாசமாக படம் எடுப்பதாக கூறி, அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே, கெம்பநாயக்கன் பாளையத்தில், பா.சுந்தரம்செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆசிரியர் வினோத்குமார், 35, என்பவர், தன் மொபைல் போனில், மாணவியரை ஆபாசமாக படம் எடுப்பதாக கூறி, நேற்று காலை, பள்ளியை, பெற்றோர் முற்றுகையிட்டு, வினோத்குமாரை தாக்கினர். தலைமை ஆசிரியர் அமல்ராஜ், "இதுகுறித்து, எனக்கு ஏதும் தெரியவில்லை. புகார் வரவில்லை. தற்போது தான், பெற்றோர் கூறுகின்றனர்,” எனக் கூறி, நழுவினார். சி.இ.ஓ., அய்யண்ணன் கூறுகையில், "பள்ளி திறந்து, ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஆசிரியர் வினோ, மூன்று மாதமாக படம் எடுத்தாக கூறுவது குழப்பமாக உள்ளது. ஆசிரியர் வினோ, சில மாணவரை அடித்ததாகவும், அதனால், பெற்றோர், இவ்வாறு கூறுவதாகவும் சொல்கின்றனர். முழுமையாக விசாரித்து, உண்மை இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment