காலைல எழுந்து, காபி போட்டு, பிரேக்பாஸ்ட்...அப்புறம் லஞ்சுன்னு செஞ்சு முடிக்கறதுக்குள்ளே போதும்போதுமென்றாகி விடுது...ஐந்து மணிக்கே எழுந்திருக்க வேண்டியிருக்கு... என்று அலுத்துக்கொண்டே அடுக்களையில் இருந்து வந்தார் சுசீலா மாமி. என்ன இதுக்கே இப்படி புலம்பறே...பக்கத்து ஸ்டேட்டுல பாரு, ஆசிரியருங்க அதிகாலைல எழுந்துடறதோடு நிற்கலே...பசங்களையும் வாட்ச் பண்றாங்க தெரியுமா... இப்ப என்ன சொல்ல வர்றீங்க... முதல்ல விஷயத்தை சொல்லி முடிச்சிடறேன்...கர்நாடக மாநிலத்துல ஒரு வித்தியாசமான சிஸ்டம் இருக்கு. பள்ளியில் படிக்கற பசங்களோட பேரன்ட் போன் நம்பர்களை வாங்கிக்கறாங்க. வாத்தியார்களை விட்டு காலை ஐந்து மணிக்கு அவங்களுக்கு போன் பண்ணி, பையனை எழுப்புங்க; படிக்க வையுங்க, யோகா,
ஜிம்முக்கு கிளம்ப வையுங்க...ன்னு கேட்டுண்டே இருப்பாங்களாம். இப்படி செய்றதால, பசங்களை அவங்க கண்காணிக்கறதோடு, பேரன்ட்டோட பொறுப்புகளை ஷேர் பண்ணிக்கறாங்க. இதுல அவங்களுக்கு சந்தோஷம் தான்... அட, இப்படி அருமையான சிஸ்டம், தமிழ்நாட்டுலேயும் வந்தா எப்படியிருக்கும்...பசங்களை பத்தி நாம கவலைப்படவே வேணாம்... ஆனா, நாமளும் இல்லே, அஞ்சு மணிக்கே எழுந்திருக்கணும்... ஆங், வந்திடப்போவுது...
No comments:
Post a Comment