Tuesday, 22 July 2014

நமது இணையதள வாசகர்கள் கவனத்துக்கு!


எனது அன்பிற்குரிய  நண்பர்களுக்கு, 
வணக்கம். 

அகமதாபாத்தில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான e-Governance பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (22.07.2014) இரவு திருச்சியில் இருந்து கிளம்புகிறேன். 

பயிற்சி முடிந்து 31.07.2014 அன்று காலை தான் மீண்டும் வருவேன். 

அதுவரை எனது இணையதளத்தில்  பதிவுகள் இருக்காது. 



பொருத்தருள வேண்டுகிறேன். 

மீண்டும் திருச்சி வந்ததும் எனது சேவை தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழகத்திலிருந்து 40 ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்கின்றனர் என்பதையும் தகவலுக்காக தெரிவித்து கொள்கிறேன். 

நன்றி! 

அன்புடன் 
www.trstrichy.blogspot.com

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?


ஏன் அவர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா?

இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது..

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99
சதவீதத்தினர் தனியார் பள்ளியில்
பயின்றவர்கள். 

அவர்களின்
பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள்
இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில்
படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின்
பொதுவான குற்றச்சாட்டு.

அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!"
என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.

அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக
தனியார் மருத்துவமனைகளில்
அனுமதிப்பதில்லையா? 

அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும்
நம்பிக்கையில்லை என்று அர்த்தமா? 

அரசாங்க
மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள்
இல்லாதபோது தனியார்
மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன
இருக்க முடியும்?

அல்லது, அரசு பணிகளில்
அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார்
அமைப்புக்களை நாடுவதில்லையா?

அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும்!

ஒரு நாளில் குறைந்தபட்சம்
அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் கூட வீடியோ , ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள்,
அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும்
அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில்
முண்டியடித்து பயணிப்பதில்லையா?

அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா?

அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம்
வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம், 

தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும்
பயிலக்கூடிய பள்ளிகள்
அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்
எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம்?

நம் குழந்தைகள் வீட்டில்
அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்; சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான
ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள்
கல்வி கற்க வேண்டும்
என்பது எல்லா விதமான பெற்றோரின்
எதிர்ப்பார்ப்பும் தானே? 

இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்?

அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல்
நடைபெறுவதில்லை என்பதும், தனியார்
பள்ளிகளில் நல்ல
தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை.

ஒரே வீட்டில் இருக்கும் ஒரு தாயின் இரண்டு குழந்தைகள்.
இருவருக்கும் தாயின் சமையல் தான்..

ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட
மறுக்கும்போது, 
அதற்காக நாம் அந்தத்
தாயின் சமையலை குறை கூறவியலுமா?

தனியார் பள்ளிகளில் பயிலும்
குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல.

அவர்களை யார் வேண்டுமானாலும்
பயிற்றுவிக்க முடியும்? 

ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள்
இரண்டாவது குழந்தையைப் போல.

இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான்
திறமைசாலிகள். 

அந்த வகையில் பார்த்தால்
கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித
அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக்
காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக்
குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே!

தேர்வு முடிவுகள் வந்த சில
நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில்
பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா?

காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட்
துண்டுகளை கடந்து, வகுப்பறையின் எதிரில்
அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும்
கால்சட்டைகளையும், கேட்பாரற்று கிடக்கும்
மலிவு விலை கால்கொலுசையும்,
கழுத்து சங்கிலியையும், 

அவற்றை புரிந்தும்
புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும்
கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால், 

ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும்
மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம்
செய்வது யார் என்ற
பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையா
வது அறிந்ததுண்டா?

வகுப்பறையில் மொபைல்
பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம்
நடத்திக் கொண்டிருக்கையில்,

அதனை கவனிக்காமல் மாணவன்
பார்த்துக்கொண்டிருந்த
அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும்
அருவெறுப்பிலும் உறைந்து போகும்
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்,

தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க
இயலாமல் தடுமாறிக்
கொண்டிருக்கின்றனரே...

அவர்களின் நிலையையாவது இவர்கள்
அறிவாரா?

பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும்
கட்டுப்பாடில்லா சுதந்திரம்
அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்ப
தையாவது அறிவார்களா?

கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர்
மீதே இடிப்பது, செவிகளை பொத்திக்கொள்ளும்
அளவுக்கு அருவெறுக்கத்தக்க
வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும்
ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப்
பள்ளிகள் திகழும்போது,

தினம் தினம்
அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள்
பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர்?

அரசு கொடுக்கும் இலவசங்களை பெற
மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத்
தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த
ஏன் முயல்வதில்லை? 

பெற்றோர் - ஆசிரியர்
கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல்
வருகைபுரிகின்றனர்?

இப்படிக் கட்டமைப்பு வசதியிலும்
ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான
அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில்,

எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்?

பெரும்பாலான தனியார் பள்ளிகளில்
மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. 

மாணவர்கள்
அறிவுச்சிறை (intellectual imprisonment)-க்குள் தள்ளப்படுகின்றனர். 

அரசுப் பள்ளிகளில்
மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது. 

பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின்
கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர்
என்பதை எல்லாம் அறிந்தும்,
வேறு வழியின்றியே தங்கள்
குழந்தைகளை தனியார் பள்ளிகளில்
சேர்க்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம்
மூலமாகவோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர். 

அவர்களிடம் திறமைக்கும்
அறிவுக்கும் அனுபவத்திற்கும்
குறைவில்லை.

ஆகவே, அரசுப் பள்ளிகளின்
மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள்
தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக,
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க
வேண்டும்.

ஆசிரியர்களிடம் சம்பள பிடித்தம்: ஐகோர்ட் தடை


கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களிடம் வீட்டு வாடகைப்படி பிடித்தம் செய்யும் இணை இயக்குனரின் உத்தரவிற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி ஆசிரியர் மரியசெல்வம் தாக்கல் செய்த மனு:

மதுரை கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் ஜூலை 4ல் ஒரு உத்தரவிட்டார். அதில் உசிலம்பட்டி, செக்கானூரணி சரகத்தில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2009 ஜூன் முதல் 2011 டிசம்பர் வரை கூடுதல் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டுள்ளது. 19 லட்சத்து 73 ஆயிரத்து 839 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டு வீட்டு வாடகைப்படி வழங்கப்படுகிறது. பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் எங்களிடம் விளக்கம் கோரவில்லை. இணை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி கே.கே.சசிதரன், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

பேருந்துகளில் "ஈவ் டீசிங்: தயங்காமல் புகார் தெரிவிக்கலாம்


பஸ்களில் "ஈவ் டீசிங்" தொந்தரவை தடுக்க போலீசுக்கு புகார் தெரிவிக்க பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வேலைக்குச் சென்று அரசு, தனியார் பஸ்களில் வீடு திரும்பும் பெண்கள் ஈவ் டீசிங்கால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் நிர்வாகம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அரசு, தனியார் பஸ்களில் ஒட்டியுள்ளனர்.

பாலியல் தொந்தரவு குறித்து 1098 அல்லது 04567 - 232 111 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

TNTET:சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர்


ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர், மூன்று ஆண்டு படிப்பான பி.லிட்., முடித்தால், பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வி டிப்ளமோவை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில், சில ஆண்டுகளுக்கு முன், ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில், தாமதம் ஏற்பட்டது.
உதாரணமாக, 2007--08 கல்வியாண்டில், இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு, பல்வேறு குளறுபடிகளால், கல்வியாண்டுக்கான தேர்வு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.

TNPSC: பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26-ல் பணி நியமன கலந்தாய்வு


பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26 தேதிகளில் ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1,395 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. பணி நாடுநர்கள் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலக கலந்தாய்வு மையத்தில் பங்கேற்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்தக் கலந்தாய்வில் சொந்த மாவட்டஙகளில் போதிய காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும் ஜூலை 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் பணி நாடுநர்கள் கலந்தாய்வு மையத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றுகள், ஜாதி சான்று மற்றும் இதர ஆவணங்களை தவறாமல் கொண்டு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

புதிய ஆசிரியர்கள் நியமனம் ஆசிரியர் பேரவை வரவேற்பு


தமிழக அரசின் கல்வி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட, புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஆசிரியர் பேரவை வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் கல்வி மானியக் கோரிக்கையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகை வழங்கியுள்ளது. இதனை அனைத்திந்திய ஆசிரியர் பேரவை வரவேற்றுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜார்ஜ் விடுத்துள்ள அறிக்கை: பெண் குழந்தைககளின் பாதுகாப் பை கருத்தில் கொண்டு, குறிப்பாக பழங்குடியின 482 பள்ளிகளில், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில், 4 ஆயிரத்து 782 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கொடுப்பதை வரவேற்கிறது. மேலும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி போதிக்க சிறப்பு ஆசிரியர்கள நியமனம், 3,459 ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர்கள் நியமனம், ஈட்டு சிறப்பு விடுப்பு, அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள பள்ளிகளில் பொது நூலக தகவல் மேசை’ ஆகிய பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கல்வி வளர்ச் சியானது அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளதை வரவேற்கிறோம்’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெய்டேஜ் சரிபார்ப்பில்....பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது...

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வெய்டேஜ் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் பி.எட் க்கு பதிலாக டி.டி.எட் சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் டி.டி.எட் சான்றிதழின் இரு நகல்களை கொடுத்து பழைய வெய்டேஜ் மதிப்பெண்ணுக்கு பதிலாக புதிய வெய்டேஜ் மதிப்பெண் பெற்றுக்கொள்ளலாம்.அங்கேயே அவர்களுக்கான புதிய வெய்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது.....

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?


Nagaraj Nagaraj
அரசுபள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் நிரந்தரமாக இருப்பதில்லை ஒருசில ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைபார்ப்பதில்லை அரசுபள்ளிகளுக்கான தேவையை அரசாங்கம் முழு அளவில் பூர்த்தி
செய்யவேண்டும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை எப்பொழுதும் இருக்காது


Dinesh Kumar
அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் .அரசின் அளவற்ற சுதந்திரம் மாணவர்களின் ஒழுக்கத்தை சீர் குலைத்து உள்ளது .ஆசிரியர்கள் தட்டி கேட்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இதை அரசு தான் உணர வேண்டும் .ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது நடவாத ஒன்று. கல்வி தற்போது வியாபார நோக்கமாக உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.மாற்றம் மக்களிடமிருந்தே துவங்க வேண்டும்

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம் வெளியிடப்படலாம்..டி.ஆர்.பி


தாள் 2 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் தாள் 1 க்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாள் 1 க்கான வெய்டெஜ் மதிப்பெண்
கணக்கிடும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையில் அரசு தரப்பிடம் இருந்து காலிப்பணியிடம் குறித்தோ, வெய்டெஜ் மதிப்பெண் வெளியீடு குறித்தோ எவ்வித தகவலும் இல்லை என டி.ஆர்.பி வட்டாரம் கூறியுள்ளது..எனினும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளிவரும் முன்னர் இதற்க்கான அறிவிப்பு வெளியிடப்படும். என்வே அடுத்த வார இறுதியில் தாள் 1 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 30:வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும்


வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல்
செயல்படஉள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம்தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது.
இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாககுறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர்வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச்சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம்தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாகஇந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும்ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் 15க்குள் சொத்து விவரம் அளிக்க வேண்டும்


மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான படிவங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப். எஸ். உள்பட அனைத்து நிலை ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பெயரில், மனைவி அல்லதுகணவன், மைனர் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்து விவரங்கள், முதலீட்டு விவரங்கள், கடன் கொடுத்த விவரங்கள், அவர்களுடைய பெயரில் உள்ள கடன் உள்ளிட்ட விவரங்களை தர வேண்டும். அவர்களுடைய பெயர்களில் உள்ள மோட்டார் வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், படகுகள், தங்கம், வெள்ளி, கரன்சிகள் உள்ளிட்ட விவரங்களை யும், அசையும், அசையா சொத்துகளின் விவரங்களையும் தர வேண்டும் என்று படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக லோக்பால் சட்டத்தின்கீழ் புதிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் (சொத்துகள், கடன்கள் குறித்து ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வது, விதிவிலக்குகள்) விதிகள், 2014ன்கீழ் இந்த அறிக்கையை மத்திய பணியாளர்கள்மற்றும் பயிற்சி துறை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின்படி, அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்துக்கான அறிக்கையை அந்த ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஊழியரின் 4 மாத அடிப்படை சம்பளம் அல்லது ரூ.2 லட்சம், இதில் எது அதிகமோ அந்த தொகைக்கான சொத்துகளின் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டாம். இந்த விதிவிலக்கை, சம்பந்தபட்ட அதிகார அமைப்பு அளிக்கலாம். இந்த விதிகளின்படி ஏற்கனவே சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்திருந்தாலும், 2014 ஆகஸ்ட் 1ம் தேதிக்கான அறிக்கையை செப்டம்பர் 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

TNTET PAPER 1:அதிர்ச்சி! இடைநிலை ஆசிரியர் நியமனம் இனி இல்லை?காலைக்கதிர்

இடைநிலை ஆசிரியர் நியமனம் இனி இல்லை? அரசுப்பணிக்காக காத்திருப்போர் கடும் விரக்தி