பேரவையில் நேற்று கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு விக்கிரவாண்டி ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது:தனியார் கல்லூரி ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்:
பண பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. ஆசிரியர் தேர்வாணையம் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது. தனியார் கல்லூரிகள் அதை செய்வதில்லை.
ராமமூர்த்தி:
பல்கலைக் கழக ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. எனவே கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்த வேண்டும்.
பழனியப்பன்:
கல்வித் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ராமமூர்த்தி:
தமிழ்நாட்டில் 3500 கல்லூரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
பழனியப்பன்:
ஏற்கனவே 1900 பணியிடம் நிரப்ப உத்தரவிடப்பட்டது. 1623 பணியிடம் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
ராமமூர்த்தி:
சமச்சீர் கல்வியை கொண்டுள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். மெட்ரிக் பள்ளிகளுக்கு தனி துறை இருக்க கூடாது.
அமைச்சர் வீரமணி:
தற்போதுள்ள முறையில் குறைபாடு இருந்தால் கூறுங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும்.
திண்டுக்கல் பாலபாரதி(மார்க்சிஸ்ட்):
சமச்சீர் கல்வியில் அனைத்தும் சமம் என்று சொல்லும் போது மெட்ரிக் பள்ளிகளுக்கு தனித் துறை ஏன்? அந்த துறையை கலைக்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேருவார்கள். மெட்ரிக் பள்ளி களில் பல பாடப் பிரிவுகள் இருப்பதால் அதிக அளவு மாணவர்கள் அங்கு செல்கிறார்கள்.
வீரமணி:
இந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ராமமூர்த்தி:
பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
வீரமணி:
தேவையான அளவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ராமமூர்த்தி:
ஈரோட்டில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக்க வேண்டும்.
வீரமணி:
அரசு விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மாற்றப்படும்.
இவ்வாறு ராமமூர்த்தி பேசினார்.
No comments:
Post a Comment