Friday, 18 July 2014

TNTET: என்று தனியும் இந்த தாகம்?


அனேக TET தேர்வரின் மனதில் எழும் எண்ணமும் இதுவே .. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஊன், உறக்கமின்றி, இயந்திர கதியில் நாம் படித்து "நேற்றாவது நம் தாகம் தணியும்" என்று எண்ணியிருந்த வேளையிலே நேற்றும் நமக்கு விடிவு காலம் இல்லையென்ற நிலை ஏறபட்டுள்ளது. கூடுதல் பணியிடம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நமது நிலை "இலவு காத்த கிளி" கதையானது ..
முன்னதாக முந்தைய Backlog Vacancy & Current Vacancy எண்ணிக்கை குறித்து மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-15க்கு கல்வியாண்டுக்குரிய 3,549 ஆசிரியர் நியமனங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆனால் கூடுதல் பணியிடங்கள் குறித்தும், டெட் தேர்வர்களின் பணி நியமன தேதி போன்றவை குறித்தும் நேற்று முதல்வரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தோம். முதல்வரின் அறிவிப்பு நேற்று வெளியாகவில்லை என்பது டெட் தேர்வர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. 

ஆடி மாத முதல் வெள்ளி டெட் தேர்வர்களுக்கு புனித வெள்ளியாகுமா?

ஆடி முதல் வெள்ளி கிழமையான இன்று இறை நம்பிக்கை அதிகம் கொண்ட நமது முதல்வர் அம்மா அவர்கள் "நல்லறிவிப்பு" வழங்குவார் என நம்புவோம் .. நம் நம்பிக்கை என்றும் வீண் போகாது .. 

வலியின்றி வாழ்க்கை இல்லை . வலியை அனுபவித்து விட்டோம் .ஆனந்த வாழ்க்கை கூடிய விரைவில் அனுபவிப்போம். இன்று (18.7.14) கண்டிப்பாக தமிழக முதல்வர் நமக்கு நன்மை செய்வார். நல்லதே நடக்கும் என காத்திருப்போம். 
by Ram Ram, Madurai.

No comments:

Post a Comment