Sunday, 17 August 2014

கற்றலில் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6 வயது முதல் 14 வயது நிரம்பிய கற்றலில் குறைபாடு, செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட குறைபாடு கொண்ட 2 லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீட்டு முகாம் நடத்த அனை வருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 14 வயது நிரம்பிய குழந்தைகளில் கற்றலில் குறைபாடு, செவித்திறன், பார்வைத்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் மருத்துவ முகாம்கள் நடத்தி அவர்களுக்கு மருத்துவ காப்பீடுகள் வழங்கும் திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இந்த மருத்துவ முகாம்கள் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான மருத்துவ முகாம்களை வரும் 20ம் தேதி தொடங்க அனை வருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. 

முன்னதாக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் மேற்கண்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணி இந்த மாதம் இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான மருத்துவ முகாம் எப்படி நடத்துவது என்பது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகள் பயன் பெறுவார்கள்.முகாமில் முடநீக்கு வல்லுநர், தொண்டை காது மூக்கு, மன நல மருத்துவர், கண் மருத்துவர் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளை பரிசோதனை செய்து ஊனமுற்றோர் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் வழங்கவும், அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்வார்கள். சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த முகாம்கள் ஜார்ஜ்டவுன், ராயபுரம், பெரியமேடு, பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையாறு, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. 

இதையடுத்து, முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1042 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு முறையாக பாடம் கற்பித்தல் சார்பாக 20 ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக யி1 கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment