Sunday, 17 August 2014

கல்வி அமைச்சர் ஆய்வுக்கூட்டம் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் ஆக.19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு தயார் செய்வதற்காக சுதந்திர தினத்தன்று அனைவருக்கும் கல்வி இயக்க அதி காரிகளின் நிர்ப்பந்தத்தால் ஆசிரியர் பயிற்றுநர்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பின் முழு நேரம் பணிக்குச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஒன்றி யங்களில் 14 வட்டார வள மையங்களும், திண்டுக்கல், பழனி நகராட்சிகளில் நகர் வள மையமும் செயல்படுகிறது. இதில் 230 ஆசிரியர் பயிற்றுநர்கள் வேலைசெய்து வருகின்றனர். இவர்கள் தவிர அனைத்து மையங்களிலும் அலுவலகப் பணியாளர்கள் சுமார் 50 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆக.15 அன்று ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சிக்கு சென்று கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொண்டுஅனைவருக்கும் கல்வி திட்ட செயல் பாடுகளை பொது மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவுப்படி ஆசிரியர் பயிற்றுநர்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். பின்பு 12 மணிக்கு மேல் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் வட்டார வள மையங்களுக்குச் சென்று முழுநேரப் பணியாக தினசரி அலுவல் பணிகளைச் செய்தனர்.இது குறித்து அவர்கள் கூறிய தாவது:- சுதந்திரதினத்தன்று எங்களுக்கு விடுமுறை. அரசு உத்தரவுப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று அறிக்கை பெற்று வந்துள்ளோம். இதன் பின்னரும் எங்களை அடிமை போல் வேலை வாங்குகின்றனர். எவ்வளவு நேரமானாலும் வேலை யை முடித்துவிட்டுத்தான் போக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து கேட்பவர்கள் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பார் என்பதால் யாரும் கேள்வி கேட்காமல் வேலைக்கு வந்துள்ளோம் என்றனர்.

No comments:

Post a Comment