Wednesday, 20 August 2014

சலுகை மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு ஆசிரியர் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் ஐகோர்ட் உத்தரவு - தினகரன்


மதுரை, சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆசிரியர் தேர்வில் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிவித்தது. இதை மாற்றியமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. என்சிடிஇ மற்றும் டிஆர்பி.யில் 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். கடந்தாண்டு ஆக. 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடந்த டிஇடி தேர்வு முடிவிற்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி நடைபெற உள்ள நியமனதிற்கு தடை விதிக்க வேண்டும். வேலைவாய்ப்பக பதிவு மூப்பு, வெயிட்டேஜ் மதிப்பெண், ஆசிரியர் பணி அனுபவம் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். மனு குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை செயலர், டிஆர்பி செயலர் மற்றும் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்து முடிவுகள் அமையும் என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment