திண்டுக்கல்: ''நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,'' என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் ஐந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கல்வித்துறை செயலர் பேசியதாவது: அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 90 சதவீதமாக உள்ள தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர், 3வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 16 க்கும்; 17 ல் இருந்த திண்டுக்கல் 19 க்கும்; 9ல் இருந்த தேனி 15வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 4ம் இடத்தில் இருந்த விருதுநகர் 5வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 11 க்கும்; 21ல் இருந்த திண்டுக்கல் 22 க்கும்; 17ல் இருந்த தேனி 25ம் இடத்திற்கும் சென்றுள்ளன. இதை சரிசெய்ய வேண்டும். அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர், என்றார்.--
தினமலரில் மற்றொரு பக்கத்தில் வந்த செய்தி...
''தமிழகத்தில் இந்த ஆண்டில், 12,588 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா தெரிவித்தார். திண்டுக்கல்லில், கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில், கல்வித் துறைக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில், தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது; இதை சரி செய்ய வேண்டும்.
நான்கு ஆண்டுகளில், காலியாக இருந்த, 76,684 பணியிடங்களில், 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு, 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர்.
No comments:
Post a Comment