Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 31 October 2013

மனநல ஆலோசகர்களை நியமிக்க கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

 "மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப" மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை வக்கீல் ஞானகுருநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக கல்லூரிக் கல்வி இயக்குனர் 2011 மே 25 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், "கல்லூரி மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதால், தவறுகள் செய்ய நேர்கிறது. இதனால் தண்டனைக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதை தடுக்க ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும். அதிக விடுப்பு எடுக்கும் மாணவர்களை கண்காணித்து, அறிவுரை வழங்க வேண்டும்.குறைந்தபட்ச வருகைப்பதிவு இல்லாவிடில், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு மாணவர்களுடன் இணக்கமாக பேசி தீர்வு காண மூத்த பேராசிரியரை உளவியல் ஆலோசகராக நியமிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.நடப்புக் கல்வியாண்டில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடியில் ஒரு தனியார் கல்லூரி முதல்வரை கொலை செய்துள்ளனர். 535 பொறியியல் கல்லூரிகளில் 120 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, திறனை மேம்படுத்த நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.ஒரு பி.டெக்., மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தடுக்க தேர்வுக்கு முன்னும், பின்னும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த மனநல ஆலோசகர்களை நியமிக்க ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் 2008-09ல் துவக்கப்படும், என அரசு அறிவித்தது. இதுவரை நடவடிக்கை இல்லை.அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்கக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார். நீதிபதிகள் வி.தனபாலன், ஜி.சொக்கலிங்கம் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் வக்கீல் சாமிதுரை ஆஜரானார். உயர்கல்வி செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment