Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 28 October 2013

"சிறப்பாக செயல்படும் சத்துணவு மையங்களுக்கு சான்றிதழ்"

திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்படும் என்றார் சத்துணவுத் திட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ப. குமார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் சத்துணவுத் திட்ட கண்காணிப்பு மற்றும் ஊக்குவிப்புக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவதற்கு முன் அதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் வாங்கப்படும் அரிசி தரமானதாக, புதிதாக இருக்க வேண்டும்.
சமையல் அறை தூய்மையாக இருக்க வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சத்துணவு ஒருங்கிணைப்பாளர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் அவ்வப்போது  ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் குமார். கூட்டத்தில் ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசும்போது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அருகே குறுகிய காலத்தில் வளரும் கீரை வகைகள், காய்கறிகளைப் பயிரிட்டு வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1527 சத்துணவு மையங்களில் 2 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவதாகவும், புகையைத் தவிர்க்க முதல் கட்டமாக 238 மையங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ஜி. சிற்றரசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அ. தமீமுன்னிசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment