தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் நேற்றுடன் முடிந்ததை அடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. இதில் 66 மையங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத் தாள் திருத்தி வருகின்றனர்.பிளஸ் 2 தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று முதல் விடைத் தாள் திருத்தும் பணி தொடங்கியது. இதற்காக, தமிழகம் முழுவதும் 66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் சாந்தோம் ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளி, தி.நகர் வித்யோதயா மெட்ரிக்குலேஷன்பள்ளி, கீழ்பாக்கம் சிஎஸ்ஐ பெயின் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ராயபுரம் டிகேஎஸ் பழனிச்சாமி மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளிட்ட இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. முதன்மை தேர்வாளர்கள், சிறப்பு அலுவலர்கள் ஆகியோர் இன்றும், நாளையும் விடைத்தாள் திருத்துகின்றனர். அதை தொடர்ந்து 24ம் தேதி துணை தேர்வு அதிகாரிகள், விடைத் தாள்களை திருத்துகின்றனர். அதன் பிறகு அந்தந்த பாடத்துக்குரிய ஆசிரியர்கள் விடைத் தாள்களை திருத்துவார்கள்.
மொழி பாடங்களான தமிழ், ஆங்கில பாடங்களில் முதல் மற்றும் 2ம் தாள் இருப்பதால் இதன் விடைத்தாள்களை திருத்த 30 நாட்கள் ஆகும். எனவே, மற்ற பாடங்களின் விடைத் தாளை ஏப்ரல் 5க்குள் திருத்தி முடிக்க பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment