தமிழகத்தில் நடைபெறும் பிளஸ்2 பொதுத் தேர்வை, புழல் சிறையில் உள்ள கைதிகள் 58 பேர் எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைத் துறை மற்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.புழல் சிறையில் 7ம் ஆண்டாக பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுகிறது. சிறை 1-ல் தண்டனை கைதிகள் 15 பேரும், விசாரணை கைதிகள் 3 பேரும், வேலூர் சிறை கைதிகள் 2 பேரும், மதுரை சிறை கைதிகள் 14 பேரும், பாளை சிறை கைதிகள் 4 பேரும், கோவை கைதிகள் 5 பேரும், கடலூர் கைதிகள் 12 பேரும், சேலத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 58 பேர் நாளை பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜ் உத்தரவின்படி, சிறை துறை தலைவர் திரிபாதி, துணை தலைவர்கள் மவுரியா, ராஜேந்திரன் மேற்பார்வையில் அங்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு கண்காணிப்புக்கு தேர்வு துறை தலைமை கண்காணிப்பாளராக அலமாதி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் சுந்தர்ராஜன், துறை அலுவலர்களாக பாடியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த கலைச்செல்வி, பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிறை துறை கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், துணை கண்காணிப்பாளர் ருக்குமணி பிரியதர்ஷினி, சிறை தன்னார்வ தொண்டு ஆசிரியர் ராஜேந்திரன் மேற்பார்வை செய்கின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment