Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 23 March 2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ல் வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ல் வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு. இதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 ம் தேதி துவங்கி 25 ம் தேதியுடன் முடிவடைகிறது.இந்த தேர்வில் 4 லட்சத்து 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை(மார்ச் 24) முதல் துவங்குகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் 10 நாட்கள் ஈடுபடுவார்கள். இதில் விடைத்தாளில் பார்கோடு முறை பின்பற்றப்பட்டுள்ளதால், டம்மி நம்பர் போடும் அவசியமில்லை. விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும் போது. அந்தந்த முகாம் அலுவலர்கள், அன்றன்று திருத்திய விடைத்தாள் மதிப்பெண்களை தேர்வுத்துறைக்கு அன்றே அனுப்பி வைப்பார்கள். இவைகள் அனைத்தும் கம்ப்யூட்டர் டேட்டா சென்டரில் பதிவு செய்யப்பட்டு வரும். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தவுடன், விரைவுபடுத்தி மே 9 ல் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் செய்து வருகிறது.

No comments:

Post a Comment