Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 March 2014

ரூ.200 வாடகையில் அங்கன்வாடி மையம்: மூச்சுவிட வழியில்லாமல் குழந்தைகள் திணறல்!


ஈரோடு கண்ணதாசன் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், இடவசதியின்றி, குழந்தைகள் அடுப்பின் கண் எரிச்சலில் அவதிப்படுகின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. ஈரோடு, வீரப்பன்சத்திரம், கண்ணதாசன் வீதியில், குழந்தைகள் மையம் இயங்கி வருகிறது. மாதம், 200 ரூபாய் வாடகையில் இம்மையம் இயங்குகிறது.
இம்மையத்துக்கு, கண்ணதாசன் வீதி, பாவேந்தர் வீதி, கம்பர் வீதி, ஜான்சி நகர், குழந்தை அம்மாள் வீதி ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தைகள் வருகின்றனர். இம்மையத்தில் ஆசிரியை ஒருவரும், ஆயா ஒருவரும், மொத்தம், 15 குழந்தைகள் பயில்கின்றனர். எட்டுக்கு, எட்டு என்ற அளவில் உள்ள அறையில், தாழ்வான கட்டிடத்தில், இம்மையம் இயங்கியது. குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல், இம்மையம் இயங்குவதாக, "காலைக்கதிர்' நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளியானது.
செய்தி எதிரொலியாக, அதே கட்டிட வளாகத்தில், இரண்டு அடி அகலத்தில், பத்து அடி நீளத்தில், சிறிய சந்தில் மற்றொரு அறைக்கு, மையம் மாற்றப்பட்டது. அறையின் தென்கிழக்கு பகுதியில், ஓடுகள் இல்லாமல், மேற்கூறை ஓட்டையாக உள்ளது. மையத்துக்குள், குழந்தைகளுக்கு சமைப்பதற்காக மளிகை பொருட்கள், சத்து மாவு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய இடத்தில், குழந்தைகளை அமர வைத்தும், அவர்கள் அருகே மண்ணெண்ணெய் அடுப்பு வைத்தும் சமைக்கப்படுகிறது. இதனால், இம்மையத்துக்குள் அமர்ந்துள்ள குழந்தைகள், கண் எரிச்சலில் அவதியுறுகின்றனர். ஆசிரியை நின்று பாடம் நடத்த வசதியாக இடமோ அல்லது கரும்பலகையோ இல்லை.
இம்மையத்துக்கு வாடகையாக மாதம், 200 ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எஞ்சிய, 200 ரூபாய் வாடகையை, இம்மைய ஆசிரியை வழங்குகிறார். கண் எரிச்சல், படிக்க இடவசதி இன்மை, பாதுகாப்பு இன்மையால், இம்மையத்தில் கல்விகற்க வரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது.
இம்மையங்களை கண்காணிக்க வேண்டிய திட்ட அலுவலர் முதல் சி.டி.பி.ஓ.,க்கள் வரை, நேரில் சென்று ஆய்வு செய்து, துறை ரீதியாக, மாவட்ட நிர்வாகத்துக்கு கொண்டு செல்ல ஆர்வம் காட்டுவதில்லை.
மாவட்ட நிர்வாகம், இம்மையங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, இடவசதியுள்ள கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும்.
இதுபற்றி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவிகுமாரி கூறுகையில், ""ஈரோடு மாவட்டத்தில் மொத்தம், 2,080 மையங்கள் உள்ளன. இதில், 945 மையங்கள் வாடகை கட்டிடத்திலும், 1,030 மையம் அரசு கட்டிடத்திலும் இயங்குகிறது.
டவுன் பகுதிக்கு, 500 ரூபாயும், புறநகருக்கு, 200 ரூபாயும் வாடகையாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின், வாடகை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மையங்களுக்கு வாடகைக்கு விட, வீட்டு உரிமையாளர்கள் மறுக்கின்றனர்'' என்றனர்.

No comments:

Post a Comment