Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 3 March 2014

பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை

பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது செய்யக்கூடிவை பற்றியும் செய்யக்கூடாதவை பற்றியும் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:–
 செய்யக்கூடியவை
பிளஸ்–2 தேர்வில் மாணவர்கள், மாணவிகள் செய்யக்கூடியவை வருமாறு:–
* விடைத்தாள் முகப்புச்சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிடவேண்டும்.
* விடைத்தாளில் ஒரு பக்கத்திற்கு 20 முதல் 25 வரிகள் வரை எழுதவேண்டும்.
* விடைத்தாளின் இருபுறங்களிலும் எழுதுவது அவசியம்.
* ‘ரப்’ வேலைகள் அனைத்தும் விடைத்தாளின் பகுதியில் இடம்பெறவேண்டும்.
* வினா எண் தவறாமல் குறிப்பிடவும்.
* இரு விடைகளுக்கும் இடையே இடைவெளி விட்டு எழுதவேண்டும்.
* வினாத்தாளின் வரிசை ஏ அல்லது பி எழுதவேண்டும்.
* விடைத்தாளில் நீலம் அல்லது கறுப்பு மை கொண்ட பேனாவால் விடைகளை தெளிவாக எழுதவேண்டும்.
* விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இடவேண்டியது அவசியம்.
மாணவர்கள் செய்யக்கூடாதவை வருமாறு:–
* வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.
* விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.
* விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண், பெயர் ஆகியவற்றை எழுதக்கூடாது.
* விடைத்தாள்கோட்டின் இடது பக்கத்தில் எழுதக்கூடாது.
* வண்ணக்கலர் கொண்ட பேனா, வண்ணக்கலர் கொண்ட பென்சில் எதையும் பயன்படுத்தக்கூடாது.
* விடைத்தாளின் எந்த பக்கத்தையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது.
இவ்வாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment