மக்களவை தேர்தல் ஏப்ரல் 2ம் வாரத்தில் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் எனவும், இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 1ம் தேதி முடிவடைகிறது. அடுத்த மக்களவையை மே 31ம் தேதிக்குள் அமைக்க வேண்டும். அதனால் மக்களவை தேர்தலை நடத்தும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. மக்களவை தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.ஏப்ரல் மாதம் கோடை வெயில் கடுமையாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இந்த கோரிக் கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. தேர்தல் நடத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சகம், மாநில அரசுகள், துணை ராணுவ படையினர், மாநில தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடனான ஆலோசனைகளை எல்லாம் தேர்தல் ஆணையம் முடித்து விட்டது.
தேர்தல் தேதி இறுதி செய்யும் கடைசி கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் இந்த வாரம் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஊழல் தடுப்பு மசோதா உட்பட சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அவசர சட்டம் பிரகடனம் செய்வது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. அதனால் தேர்தல் தேதி அறிவிப்பு சற்று தாமதமாகலாம் எனவும் கூறப் படுகிறது. மக்களவை தேர்தல் பற்றி சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன அவற்றின் விவரம்:
* ஏப்ரல் 7ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் தேர்தல் தொடங்கலாம்.
* மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெறும்.
* அப்படி நடந்தால், வரலாற்றில் முதல் முறையாக நீண்ட நாட்களாக நடைபெற்ற தேர்தல் என்ற பெயர் கிடைக்கும்.
* 2009ல் மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 முதல் மே 13 வரையில் 5 கட்டங்களாக நடந்தது.
* நாடு முழுவதும் வாக்கா ளர் பட்டியலில் 81 கோடி வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் இருந்து இப்போது வரையில் புதிதாக 9.71 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
* முதல் கட்டமாக நக்சல் பாதிப்பு மாநிலங்கள் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும்.
* மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு ணீ70 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
* இந்த மக்களவை தேர்தலில் முதல் முறையாக, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற வாக்காளர்களுக்காக Ôநோட்டாÕ என்ற பட்டன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ளது.
* நாடு முழுவதும் தேர்தலை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்தி முடிக்க மொத்தம் 1.1 கோடி தேர்தல் பணி ஊழியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதில் பாதிப் பேர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். இதில் சுமார் 55 லட்சம் சிவில் அலுவலர்கள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
* நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
* மொத்தம் சுமார் 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இதனுடன் பொதுத்துறை நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட 2.5 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
* ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால், அந்த மாநிலங்களில் 2 வாக்குகள் பதிவு செய்ய 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
No comments:
Post a Comment