Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 21 March 2014

முதல் முறையாக ஓட்டுஅளிப்பவர்களுக்கு , பரிசு


பஞ்சாப் மாநிலத்தில், முதல் முறையாக ஓட்டுஅளிப்பவர்களுக்கு, அம்மாநில தேர்தல் அதிகாரிகள், பரிசு அறிவித்துள்ளனர். சிரோன்மணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, பஞ்சாபில், இளம் வாக்காளர்களிடையே, ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, புதுப்புது திட்டங்களை, மாநில தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தேர்தல் அதிகாரி, வருண் ரூசம் கூறியதாவது: வரும் தேர்தலில், முதல் முறையாக ஓட்டளிப்பவர்கள், மொபைல் போன் வாங்கும் போது, தங்களுக்கு வழங்கப்பட்ட, ஓட்டு சிலிப்பை காட்டினால், மொபைல் போன் விலையில், 10 சதவீதமும், மொபைல் போன் உபகரணங்கள் வாங்கும்போது, 15 சதவீதமும் தள்ளுபடி பெறலாம். மேலும், தேர்தல் நாளில், ஓட்டல்களில் சாப்பிடும், இளம் வாக்காளர்களுக்கு, 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை, ஓட்டுச் சாவடிகளுக்கு முதலில் வரும், 20 பேருக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு வருண் ரூசம் கூறியுள்ளார்.
"ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்', "ஓட்டளிப்பது உங்கள் கடமை' என்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம் மட்டும், இளம் வாக்காளர்களுக்கு, பரிசு என்ற பெயரில், இலவசமாக தள்ளுபடிகளை வழங்குவது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment